மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

வேலைக்காரன் மோஷன் போஸ்டர்!

வேலைக்காரன் மோஷன் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று (டிசம்பர் 5 ) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுவருகிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ஃபஹத்பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது, பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அனிருத் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon