மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

காற்று மாசு: குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும்!

காற்று மாசு: குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும்!

காற்று மாசுபாடு காரணமாகக் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா. நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

காற்று மாசுபாடு தொடர்பாக ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு ஆசியாவில்தான் ஏராளமான குழந்தைகள் காற்று மாசு மிக்க பகுதிகளில் வசிக்கின்றனர். உலக அளவில் ஒரு கோடியே 70 லட்சம் குழந்தைகள் காற்று மாசு மிக்க பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களில் ஒரு கோடியே 22 லட்சம் குழந்தைகள் தெற்கு ஆசியாவில் உள்ளனர். கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் 43 லட்சம் குழந்தைகள் நச்சுக் காற்றை சுவாசிக்கின்றன. இந்த நச்சுக் காற்றானது, குழந்தைகளின் நுரையீரலை மட்டும் அல்லாது, அவர்களின் மூளை வளர்ச்சியையும் சேதப்படுத்தி, எதிர்காலத்தைச் சிதைக்கிறது.

காற்று மாசு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறைந்த காற்று மாசு இருக்கும்போது, முகமூடி அணிந்து அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளிக்க வேண்டும். தடுப்பு ஊசி முதலான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon