மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

பொதுக் கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு!

பொதுக் கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு!

அரசுப் பொதுக் கடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 2.53 சதவிகிதம் அதிகரித்து ரூ.65.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இதுகுறித்து வெளியான பொதுக் கடன் மேலாண்மை அறிக்கையில், " ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இந்த நிதியாண்டின் (2017-18) இரண்டாவது காலாண்டில் அரசுப் பொதுக் கடன் ரூ.65,65,652 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிதியாண்டின் முதல் காலாண்டில் பொதுக் கடன் மதிப்பு ரூ.64,03,138 கோடியாக இருந்தது. முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்தக் காலாண்டில் இதன் மதிப்பு 2.53 சதவிகிதம் அதிகரித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது காலாண்டில் பத்திரங்கள் மதிப்பு ரூ.1.89 கோடி எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு முந்தைய காலாண்டில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் இந்தியாவின் மொத்த பொதுக் கடன் 61.13 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது என்று பொதுக் கடன் மேலாண்மை அறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ந்து பொதுக் கடன் வேகமாக அதிகரித்து வருவதற்கு மத்திய அமைச்சகங்களின் செலவு அதிகரித்து வருவதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மொத்தக் கடனில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக உள்நாட்டுக் கடன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon