மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 டிச 2017

தேசிய வருவாய் வழி தேர்வு தேதி மாற்றம்!

தேசிய வருவாய் வழி தேர்வு தேதி மாற்றம்!

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு தேதி மாற்றப்பட்டதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று முன்தினம் (டிசம்பர் 4) அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான (NMMS) திறனாய்வு தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி நடக்கவிருந்தது. மழையால் பல்வேறு மாவட்டங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதால், தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே, டிசம்பர் 16ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon