மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஊர் நிர்வாகத்தில் நேர்மை, உடல் நிர்வாகத்தில் தூய்மை!

 ஊர் நிர்வாகத்தில் நேர்மை, உடல் நிர்வாகத்தில் தூய்மை!

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிர்வாகம், 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகர நிர்வாகம் என்று இரு பெரும் அரச நிர்வாக அனுபவம் மிக்கவர் மனித நேயர் சைதையார்.

இவற்றுக்கு இடையில் மனித நேய அறக்கட்டளை என்னும் மாபெரும் அமைப்பை நிறுவி பல்வேறு தரப்பில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனதை நிர்வாகம் செய்யும் மகா அனுபவம் மிக்கவர் மனித நேயர்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற நிர்வாகம், மாநகர மேயர் என்ற நிர்வாகம், தனது மனித நேய அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் மாணவ நிர்வாகம் இப்படி பல நிர்வாகங்களை பழுதின்றி பேணிகாத்தவர் மனிதநேயர்.

இவர் அண்மையில் மேற்கொண்ட ஐரோப்பிய பயணத்தின் போது ஓர் ரகசியத்தை உடைத்தார். ஊர் நிர்வாகத்தில் கை தேர்ந்த மனித நேயர் தன் உடலை எவ்வாறு நிர்வாகம் செய்கிறார் என்பதுதான் அந்த ரகசியம்.

ஆம்... பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால் தொந்தியும் தொப்பையுமாகத்தான் இருக்கிறார்கள். கவுன்சிலர்களில் இருந்து எம்.எல்.ஏ. எம்.பி வரை பலரும் ’மிடில் பாடி வெயிட்’ எனப்படும் தொப்பையோடுதான் தரிசனம் இருக்கிறார்கள். இந்த வழக்கமான தோற்றம் இல்லாமல் ஃபிட்டிங் ஆக தோற்றமளிக்கும் சில இளைய அரசியல்வாதிகள் இன்னும் சிலர் விதிவிலக்காக இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் நாற்பது ஆண்டு காலமாக அரசியலில் இருக்கும் மனித நேயரைப் பாருங்கள். ஏதோ கல்லூரி செல்கிற இளைஞனின் உடல் வாகு போல ஒல்லியும் அற்ற குண்டும் அற்ற பொலிவான தோற்றத்தில் இருக்கிறார்.

இதன் பின்னணி பற்றித்தான் வாடிகன் தமிழ் ரேடியோவுக்கு அளித்துள்ள பேட்டியின் இரண்டாம் பாகத்தில் தெளிவாகக் குறிப்பிடுகிறார் மனித நேயர்.

நலமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியும் இயற்கை உணவின் மகத்துவம் பற்றியும் இந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

‘’நம்முடைய பிரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐந்து தன்மைகளால் ஆனது. இந்த உலகம் எப்படி ஐந்து தன்மைகளால் ஆனதோ, அதேபோலத்தான் இந்த உடலும் ஐந்து தன்மைகளால் ஆனது.

இன்று உலகத்தில் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டதாகச் சொல்கிறோம். அப்படி மாசு அடைந்தால் என்ன ஆகிறது? ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. அப்படி ஓசோன் படலம் பாதிக்கப்பட்டால் உலகத்துக்கு அழிவு வருகிறது என்று சொல்கிறோம்.

அதுபோல ஐந்து தன்மைகளால் ஆன நம் உடலை நாம் உணவுப் பழக்கத்தில் செய்யும் மாறுதல்களால் மாசுபடுத்தி உடலை அழிவை நோக்கிக் கொண்டு செல்கிறோம். உணவும், உணவு உண்ணும் முறையும் மட்டும்தான் மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவ முடியும்.

மாத்திரை மருந்து இல்லாத மகிழ்ச்சி தரும் வாழ்வு என்பது உணவிலேயும் உணவு உண்ணும் முறையிலேயும் தான் இருக்கிறது.

பொதுவாக எல்லாரும் உணவு எப்படி சாப்பிடுகிறார்கள். சிலர் இரண்டு நிமிடத்தில் சாப்பிடுகிறார்கள், சிலர் ஐந்து நிமிடத்தில் சாப்பிடுகிறார்கள், சிலர் ஏழு நிமிடத்தில் சாப்பிடுகிறார்கள்.

வேகம் வேகம் வேகம்... பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இருக்கும் நமது சமூகத்து இளைஞர்கள் உழைப்பதற்கு செலவிடும் நேரத்தை, உண்ணுவதற்கு செலவிடுவதில்லை என்பதுதான் உண்மை.

பணம் சம்பாதிப்பதற்காக ஆரோக்கியத்தை இழந்து

கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியத்தை இழந்து பெற்ற பணம் மூலம் மீண்டும் ஆரோக்கியத்தைப் பெற முடியுமா என்றால் முடியாது.

எனவே இன்றைய இளைஞர்களுக்கு எல்லாம் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது...வாழ்க்கையில் நீங்கள் எதற்கு நேரம் ஒதுக்குகிறீர்களோ இல்லையோ... தயவு செய்து உணவு உண்ணுவதற்கு நேரம் கட்டாயம் ஒதுக்குங்கள்.

ஒரு கவளம் உணவை நீங்கள் வாயில் போட்டபிறகு 32 முறை நீங்கள் நன்றாக மென்றிட வேண்டும் அல்லது அந்த உணவு திரவமாகிற வரை மென்றிட வேண்டும். உமிழ் நீர் கலந்து அந்த உணவை இரைப்பைக்கு அனுப்பினால் அது எளிதில் ஜீரணமாகும். நமக்கு எத்தனை பற்கள்? 32 பற்கள்.

32 பற்கள் நமக்கு இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அடுத்து பார்ப்போம்.

பொதுவாகவே பொதுமக்களிடத்தில் ஒரு அபிப்ராயம் இருக்கிறது, மக்கள் பணத்தைத் தின்றுதான் அரசியல்வாதிகளுக்கு தொப்பை பெரிதாக இருக்கிறது என்று! ஆனால் நமது மனித நேயர் ஊர் நிர்வாகத்திலும் சுத்தமாக இருக்கிறார், உடல் நிர்வாகத்திலும் கவனமாக இருக்கிறார். அதனால்தான் மேயரின் மேனி கட்டுசெட்டாக கச்சிதமாக இருக்கிறது.

அவரைப் போன்றே அனைவருக்கும் வாய்த்திட அடுத்த பகுதியைக் காண்போம்...

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon