மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ப்ளீஸ் உள்ளே வாங்க...

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: ப்ளீஸ் உள்ளே வாங்க...

“என்ன ஸார்... இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ளே வாங்க ஸார்...” என்று ஶ்ரீ தக்‌ஷாவின் சன்ஸ்ரே பேஸ் 2 வளாகத்தின் மார்க்கெட்டிங் மானேஜர் எங்களை அழைத்தார். தரைதளம் முழுக்க வாகனங்கள் நிறுத்தும் வசதியான இடத்தைக் கடந்து அலுவலகத்துக்குள் சென்றோம்.

நாங்கள் எதைப் பற்றியும் அவரிடம் கேட்கவில்லை. அதற்குத் தேவையும் இல்லை. ஏற்கெனவே ஶ்ரீ தக்‌ஷாவின் விருத்தா வளாகத்தினுள் சென்ற அனுபவமே பரவசமாக இருந்தது. கேட்க நினைத்த கேள்விகளுக்கு, நாங்கள் பார்த்த காட்சிகளும் நபர்களுமே பதில் சொல்லி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சன்ஸ்ரே பேஸ் டு வளாகத்தின் பிரமாண்டத்தையும், சுற்றுச்சூழலையும் விட்டு இன்னும் நான் விலகவில்லை. இருந்தாலும் ஶ்ரீ தக்‌ஷாவின் நிர்வாகி பேசத் தொடங்கினார்.

“சன்ஸ்ரே பேஸ் டுவைப் பொறுத்தவரை... நாலு பிளாக்குகள் சார். ஒவ்வொரு பிளாக்குலேயும் எட்டு ஃப்ளோர். ஒரு ஃப்ளோர்ல எட்டு ஃப்ளாட்” என்று பேசியவரை இடைமறித்தார் என் சம்பந்தி... “தம்பி, இந்த கணக்கெல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை. இங்கே நேரா வந்ததற்கு முக்கியக் காரணமே... எங்களுக்குத் தேவையான வசதிகள் இருக்கா என்கிறதைப் பார்க்க மட்டும்தான். குறிப்பா... இதுவரை நகர வாழ்க்கையிலே இருந்துட்டு ஓய்வு காலத்தை நிம்மதியா கழிக்க ஆசைப்படறேன். அந்த நிம்மதி எனக்குக் கிடைச்சா போதும் தம்பி...” என்றார்.

“கண்டிப்பா சார். இங்கே இருக்கிற வசதிகளைப் பற்றி கேட்டீங்க... அதைச் சொல்ல வேண்டியது எங்களோட கடமை சார்... மொத்தம் 256 ஃப்ளாட்டுகள் இருக்கிற நாலு பிளாக்குலேயும் ஒவ்வொரு பிளாக்குக்கும் ரெண்டு லிப்ட்கள். 24 நேர மின்சார வசதி இருக்கும். கரன்ட் கட் ஆச்சுன்னா பொது இட பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர் இருக்கு. ஒவ்வொரு ஃப்ளாட்லேயும் UPS வசதியும் செய்து கொடுத்திருக்கோம். கரன்ட் கட் ஆனா ஆட்டோமெட்டிக்கா மின்சார வசதி கிடைச்சுடும். சுத்திரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறதுக்கு வழி செய்து கொடுத்திருப்பது மட்டுமில்லாமல் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியும் இருக்கு. அதுமட்டுமல்ல... தீயணைப்புப் பாதுகாப்பும் ஒவ்வோர் இடத்திலும் இருக்கு. முக்கியமான இடங்களில் சிசிடி கேமராவும் பொருத்தப்பட்டிருக்கு...” என்றவருக்குத் தாகம் எடுத்திருக்க வேண்டும். எங்களை நோக்கி, “சார்... கூல் டிரிங்க்ஸ் சாப்பிடறீங்களா?” என்றார்.

“வேண்டாம் தம்பி... அப்புறம் லஞ்ச் டயத்துல சாப்பாட்டைச் சாப்பிட முடியாது” என்றேன்.

“இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிடறேன்... இந்த சன்ஸ்ரே வளாகத்துக்குள்ளே ஒலி எழுப்ப தடை செய்திருக்கோம் சார். நிம்மதியை விரும்பி இங்கே வந்து குடியேறுபவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்கான சிறப்பு ஏற்பாடு. நீங்கக் கேட்டீங்களே நிம்மதி... அது இங்கே நிச்சயம் கிடைக்கும். வாங்க அபார்ட்மென்ட்டைப் பார்க்கலாம்” என்றார்.

உட்கார்ந்திருந்த நானும் எழுந்து கொண்டேன். சன்ஸ்ரே பேஸ் 2 அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன்.

அபார்ட்மென்ட்டின் லிப்ட் அருகில் சென்றபோது சம்பந்தி சொன்னார். “வாங்க படி வழியே ஏறிப் போவோம்” என்றார்.

படிக்கட்டுகளின் அகலமும் நீளமும் ஒரே சமயத்தில் நான்குக்கும் மேற்பட்டவர்கள் ஏறும் அளவில் வசதியாக இருந்தது. பிடித்துக்கொண்டு ஏறுவதற்கும் தோதாக அமைக்கப்பட்டிருந்தது. படிகளைக் கடந்து முதல்தளத்தை அடைந்தோம்.

அந்த தளத்தில் இருந்த ஃப்ளாட்டுகளின் வாசல் கதவின் பக்கத்தில் ஒரு கப்போர்டு. இது ஒரே மாதிரியாக ஒவ்வொரு ஃப்ளாட்டுகளின் முன்பும் இருந்ததைப் பற்றி ஶ்ரீ தக்‌ஷாவின் நிர்வாகியிடம் விசாரித்தோம்.

“செப்பல் ஸ்டாண்டு சார்... சிலர் வீட்டுக்குள்ளே செப்பல்ஸ் விட விரும்ப மாட்டாங்க. சிலர் வீட்டுக்குள்ளேயே செப்பல்ஸ் விட்டாலும்... உங்களை மாதிரி கெஸ்ட் யாராவது வந்தால் தங்கள் காலணிகளை விட வசதியாக இந்த ஏற்பாடு செய்திருக்கோம். இதிலுள்ள இன்னொரு வசதி என்னென்ன... அடுத்த ஃப்ளாட்டுல வசிக்கிறவங்களுக்கும் நாம வெளியே விடும் காலணிகள் எந்த இடையூறும் செய்யாது. இந்த மாதிரி வசதி ஶ்ரீ தக்‌ஷாவோட அத்தனை அபார்ட்மென்ட்டுலேயும் எங்க நிர்வாகம் செய்து கொடுத்திருக்கு.”

“சின்ன விஷயங்களையும் இந்த அளவுக்கு சிரத்தையெடுத்து செய்வது பெரிய விஷயம் தம்பி.” மனதாரப் பாராட்டினேன். அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார் என் சம்பந்தி.

அகலமாக இருந்த முதல் தளத்தின் ஒவ்வொரு ஃப்ளாட்டையும் கடந்தோம். ஃப்ளாட்டின் கதவுகளில் தெரிந்த பளபளப்பையும் மீறி அதன் உறுதி தெரிந்தது. ஒரு கதவின் அருகில் சென்று அதை உரசிப் பார்க்கலாமா என்று யோசித்தேன். ஆனால், கதவைத் தடவப்போய்... அது உள்ளே இருப்பவர்களுக்கு உபத்திரவாகிவிடுமோ என்று நினைத்தபடி நின்றேன்.

அதே நேரம் நான் பார்த்த அந்த ஃப்ளாட்டின் வாசல் கதவைத் திறந்துக்கொண்டு சட்டென்று வெளிபட்டார் அந்த மனிதர். என்னை உற்றுநோக்கினார்.

“சாரி சார்... அபார்ட்மென்ட்டைப் பார்க்க வந்தோம். எங்களோட உங்க அபார்ட்மென்ட் மானேஜரும் வந்திருக்கார்” என்று நெளிந்தேன். அவர் அதை உதாசீனப்படுத்தி விட்டுச் சொன்னார்.

“சார்... உங்களைப் பார்த்தா எனக்குப் பரிச்சயப்பட்டவர் மாதிரி தெரியறீங்க. எங்கேயோ பார்த்திருக்கேன். எங்கேன்னு தெரியலை... ப்ளீஸ் உள்ளே வாங்க...” என்றார், நான் அவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்த கதவை அகல திறந்தபடி...

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon