மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

லிவிங் டு கெதருக்கு முற்றுப்புள்ளி வைத்த லேகா

லிவிங் டு கெதருக்கு முற்றுப்புள்ளி வைத்த லேகா

நடிகை லேகா வாஷிங்டன் காதலரும் பத்திரிகையாளருமான பல்லோ சட்டர்ஜியை மணக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்பட பல படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள அவர், இசை ஆல்பங்களுக்கு பாடல் எழுதியுள்ளதோடு பாடியும் நடனமாடியும் இருக்கிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளாகப் பத்திரிகையாளர் பல்லோ சட்டர்ஜியைக் காதலித்துவருவதோடு மும்பையில் இவர்கள் இருவரும் ஒன்றாக (லிவ்-இன்) சேர்ந்து வாழ்ந்துவருகின்றனர். திருமண பந்தத்தில் பெரிதும் விருப்பமில்லை என்று முன்பு கருத்து தெரிவித்திருந்த லேகா, காதல், அதற்கான அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றில் நம்பிக்கையுண்டு என்று தெரிவித்திருந்தார்.

சில ஆண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த இந்தக் காதல் ஜோடி தற்போது தங்களின் லிவ்-இன் லைஃபுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக மும்பை மிரர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ‘நவம்பர் 18ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மணமக்கள் இந்து, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பொது முறைப்படி திருமணம் நடைபெறும் எனவும், அதில் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon