மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

மனிதர்கள் இல்லாத காவல் நிலையம்!

மனிதர்கள் இல்லாத காவல் நிலையம்!

தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா, ஜப்பான் நாடுகளிடையே பெரும் போட்டி நடைபெற்றுவருகிறது. அதன்படி இரு நாடுகளும் அவ்வப்போது புதுமையான தொழில்நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

தற்போது சீனா செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களைக் கொண்டு செயல்படும் காவல் நிலையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. சீன நாட்டின் முன்னணி நிறுவனமான டென்சென்ட் இந்தப் பணியைச் செய்துவருகிறது. தற்போதைக்கு டிரைவிங் பயிற்சி கொடுக்கவும் டிரைவிங் சோதனைக்காகவும் இந்தச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. முழுமையான பணிகள் முடிவடைந்தால் காவல் நிலையத்தில் மனிதர்களுக்கு பதிலாகச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க உதவி புரிந்துவருகிறது. இதற்காகப் பயனர்கள் புகைப்படத்தை எடுத்துச் செல்ல தேவையில்லை. முகத்தை ஸ்கேன் செய்து அவர்களின் விவரங்களை அந்தச் செயற்கை நுண்ணறிவு தெரிந்துகொள்கிறது.

அது மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, காவலுக்காக நியமிக்கப்பட்ட உடன், முகத்தை ஸ்கேன் செய்தே ஒருவரின் தகவல்களைத் தெரிந்துகொள்கிறது. அதனால் இனி பெரும்பாலான தவறுகள் குறைக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இந்த முயற்சியை டென்சென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து சீன அரசும் மேற்கொள்கிறது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon