மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

படிப்படியாகக் குறையும்!

படிப்படியாகக் குறையும்!

தமிழகத்தில் நாளை (நவம்பர் 14) முதல் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், “தென்மேற்கு வங்கக் கடலில், நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக வலுப்பெற்று அதே நிலைக் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மற்றும் புதுவை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் மழையும், பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வட திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதால், அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும்” என அவர் தெரிவித்தார். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon