மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ரகுவரனாக ஆசை: ஹரிஷ் உத்தமன்

ரகுவரனாக ஆசை: ஹரிஷ் உத்தமன்

`நடிகர் ரகுவரனை போல இருக்க விரும்புகிறேன்’ என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் ஹரிஷ் உத்தமன்.

`நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் துரைபாண்டி கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்தவர் ஹரிஷ் உத்தமன். அவர் சமீபத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில்,"இயக்குநர் சுசீந்திரன் என்னை வேறு விதமாக மாற்ற விரும்பினார். அதற்கேற்ப நானும் இப்படத்துக்காக நிறைய மாறினேன். என்னுடைய பார்வை, நடிப்பு, பேச்சு என எல்லாவற்றையும் மாற்றினேன். மேக்-அப், விக் மற்றும் கறுப்பு தாடி என துரைபாண்டியாகவே மாறினேன்" என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் அவர்,"நான் என் முதல் படத்திற்கு மட்டுமே ஹோம்வொர்க் செய்தேன். அதற்கடுத்த படங்களில் எல்லாம் படப்பிடிப்பிற்கு சென்ற பின்பு இயக்குநர் சொல்வதை கேட்டு நடிக்கிறேன். நடிகர் ரகுவரனின் ரசிகன் நான். அவர் ஒரு அற்புதமான நடிகர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரைப் போலவே இருக்க விரும்புகிறேன். ஒரு படத்தில் எவ்வளவு நேரம் வருகிறோம் என்பது முக்கியமில்லை. நம் கதாபாத்திரம் அந்த படத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்" என்று கூறியுள்ளார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon