மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

கஜோலை காப்பாற்ற வந்த கமல்

கஜோலை காப்பாற்ற வந்த கமல்

பாலிவுட் நடிகை கஜோலின் ரசிகன் நான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அங்கு அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உட்பட அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களை சந்தித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

மேலும் கமல், அமிதாப் பச்சன் மற்றும் கஜோல் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தை கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு, “இரண்டு மாபெரும் சாதனையாளர்களோடு செல்ஃபி எடுக்கும் நேரம்... தவிர்க்க முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு ரீ ட்விட் செய்துள்ள கமல், “நான் செல்ஃபிகளுக்கு ரசிகன் அல்ல. உண்மையில் உங்கள் இருவரின் ரசிகன். இது கிண்டல் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon