மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

பிரித்வி படத்தில் `பிக் பாஸ்’ கணேஷ்

பிரித்வி படத்தில் `பிக் பாஸ்’ கணேஷ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றவர்களுள் ஒருவரான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிரித்விராஜ் நடித்து வரும் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். தமிழில் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை அனைத்து ரசிகர்களும் அறியுமாறு அடையாளப்படுத்தியது. தற்போது மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் மலையாள படமான ‘மை ஸ்டோரி’யில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரோஷினி தினகர் இயக்கி வரும் இதில் பிரித்விராஜுக்கு ஜோடியாகப் பார்வதி நடிக்கிறார். ஷான் ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நிறைவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் போர்ச்சுக்கலில் துவங்கவிருக்கிறது. இதில் கணேஷ் வெங்கட்ராம் கலந்து கொள்கிறார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon