மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

நான் கவனிக்கப்படவில்லை: நீது சந்திரா

நான் கவனிக்கப்படவில்லை: நீது சந்திரா

'என் திறமை யாராலும் கவனிக்கப்படவில்லை' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை நீது சந்திரா.

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா. பிரியதர்ஷன் இயக்கிய கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

ஆனால் தொடர்ந்து நடிக்க அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்,“நான் என் தனிப்பட்ட வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் என் தந்தையை நான் இழந்துவிட்டேன் பின்பு என் குடும்பத்தின் மீது மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என் திறமையும் கவனிக்கப்படவில்லை” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் “ நடிகர் சல்மான்கான் படத்தில் நடித்தாலும் கூட என்னை சினிமா ஒழுங்காகப் பயன்படுத்தப்படவில்லை. நான் திரைப்படக் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதனாலோ என்னவோ என்னை வழிநடத்த ஆள் இல்லாமல் போய் விட்டது. நான் எந்த திரைப்பட தயாரிப்பாளருடனும் இயக்குநருடனும் பணிபுரிய தாயராக இருக்கிறேன். எனக்கு ஏற்றாற்போல் கதைகள் அமையும் என்றும் நம்புகிறேன்" என்று கூறுயுள்ளார்.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கும், சேட்டிலைட் சேனல்களிலும் பல நடிகர் நடிகைகள் நிகழ்ச்சி தொகுப்பாளராக செல்லும் போது நீங்கள் தூர்தர்ஷனில் ஏன் நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் என்று கேட்டபோது, ​​ ”இந்த உலகத்தில் முக்கியமான ஒன்றாக கிராமங்கள் இருக்கிறது. அங்குள்ள மக்களை சென்றடைய இதுவே சிறந்த வழி. எனவே அதை தேர்ந்தெடுத்ததில் பெருமையடைகிறேன்" என்று தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நீது சந்திரா.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon