மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

எளிமைப்படுத்தப்பட்ட வரித் தாக்கல்!

எளிமைப்படுத்தப்பட்ட வரித் தாக்கல்!

நவம்பர் 10ஆம் தேதியன்று கவுகாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரித் தாக்கல் முறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரித் தாக்கல் முறைகள் எளிமைப்படுத்தப்பட்டதோடு, தாமதமான வரித் தாக்கல்களுக்கான அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. இனி தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டிஆர்-3பி-யை மார்ச் மாதம் வரை தாக்கல் செய்யலாம்.

ஜிஎஸ்டி நெட்வொர்க் போர்டலில் தாக்கல் செய்யப்படும் 40 சதவிகித ரிட்டன்களுக்கு வரி இல்லை. முன்பு, ஜிஎஸ்டிஆர்-3பி ரிட்டனைத் தாக்கல் செய்ய அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்கும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வரி ரிட்டன்களுக்கான அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறைச் செயலாளரான ஹஸ்முக் அதியா பேசுகையில், “தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வரி ரிட்டன்களுக்கான அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி ரிட்டன்களான ஜிஎஸ்டிஆர்-2 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3 ஆகியவற்றைத் தொழில் நிறுவனங்களுக்கு எளிதாக்குவதற்கான வழிவகைகளை ஆய்வு செய்ய ஜிஎஸ்டி நெட்வொர்க் தலைவரான அஜய் பூஷன் பாண்டே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon