மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

மெரினா நினைவிடங்கள் : அரசுக்கு நோட்டீஸ்!

மெரினா நினைவிடங்கள் : அரசுக்கு நோட்டீஸ்!

மெரினாவிலுள்ள சமாதிகளை காந்தி மண்டபத்துக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மெரினா கடற்கரையில்தான் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில்," மெரினா கடற்கரையிலுள்ள தலைவர்களின் சமாதிகளை அடையாறு காந்தி மண்டபத்துக்கு மாற்ற வேண்டும்"என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று ( நவம்பர் 13) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்," மெரினாவில் உள்ள சமாதிகளை காந்தி மண்டபத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் தமிழக அரசின் பதில் தேவை, எனவே இதுகுறித்து மத்திய- மாநில அரசுகள் இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon