மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

`பிக் பாஸ்’ ஆரவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

`பிக் பாஸ்’ ஆரவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

சமீர் பரத் ராம் இயக்கும் புதிய படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். அதிலும் குறிப்பாக ஓவியா அவரை காதலித்ததால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் தற்போது கோலிவுட்டில் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி வருகிறார். சிலம்பாட்டம் இயக்குநர் சரவணன் இயக்கும் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர், மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார். `காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டனின் குறும்படமான `மீண்டும் ஒரு புன்னகை’ படத்தைத்தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார். திரைக்கதையை மணிகண்டன் எழுத, நலன் குமாரசாமி வசனம் எழுதுகிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.

படத்தில் இரண்டு நாயகிகள் என்று சொல்லப்படுகிறது. இப்படம் குறித்தான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon