மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்!

ஆட்டுக்குட்டிக்குப் பால் கொடுக்கும் நாய்!

மதுரை மாவட்டம் கேசம்பட்டி என்னும் கிராமத்தில் ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ்வூரைச் சேர்ந்த தெய்வம் என்பவர், இந்தக் கிராமத்தில் டீக்கடை நடத்திவருகிறார். இவர் வளர்த்த ஆடு ஒன்று, சில மாதங்களுக்கு முன் குறை மாதக் குட்டி ஒன்றை ஈன்று இறந்துவிட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு பால் டப்பா மூலம் பசும்பால் கொடுத்துக் காப்பாற்றிவந்தார் தெய்வம். அவர் கடையில் ஒரு நாயையும் வளர்த்துவந்தார். அந்த நாயும் குட்டிகளை ஈன்று குட்டிகளுக்குப் பால் கொடுத்துவந்தது. நாளடைவில் அந்த நாய், ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது . ஒரு நாள், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுத்த காட்சியைக் கண்ட தெய்வம் ஆச்சரியப்பட்டு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார்.

“மனிதர்கள் இடையே பல பாகுபாடுகளும் வேறுபாடுகளும் இருக்கும்போது, இந்த விலங்குகளிடம் இப்படி ஒரு பாகுபாடற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்றார் அவர்.

இவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இந்தக் காட்சியைக் கண்டு வியப்படைகின்றனர் . ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வலை தளங்களிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளன.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon