மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

கறையை அகற்ற வேண்டிய நேரம்!

கறையை அகற்ற வேண்டிய நேரம்!

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது அப்பாவித் தமிழர்கள் இராணுவத்தினால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த இறுதிக் கட்டப் போரில் சர்வதேசப் போர் விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொதுமக்களாக அங்கு குடியிருந்த தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் இலங்கை இறுதிக் கட்டப் போரில் இராணுவத்தால் 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐநா ஆய்வறிக்கை கூறியது.

இது குறித்து சர்வதேச விசாரணை நடந்துவரும் சூழலில் தற்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். "இறுதிக் கட்டப் போரின்போது அப்போதைய அதிபராக இருந்தவரின் கவனத்தை ஈர்க்க ராணுவத்தினர் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர். நான் ராணுவத்திற்கு எதிராகச் செயல்படுவதாக சிலர் என்மீது குற்றம் சுமத்துகின்றனர். ராணுவத்தின் மீது பட்டுள்ள கறையை அகற்ற வேண்டிய நேரம் இது. நாட்டுக்காகச் சண்டையிட்டவர்களை ஆளுங்கட்சி வேட்டையாடுவதாக எதிர்க்கட்சி கூறுவதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்" என்றார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon