மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஜிஎஸ்டி : நெய் காணிக்கை கட்டணம் உயர்வு!

ஜிஎஸ்டி : நெய் காணிக்கை கட்டணம் உயர்வு!

ஜிஎஸ்டி வரியால் திருவண்ணாமலையில் நெய் காணிக்கை கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்குக் கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

மகா தீபத்துக்கு பக்தர்கள் நெய் காணிக்கை வழங்குவார்கள். வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் டி.டி. எடுத்தும், நெய்க்கு ரொக்க பணம் செலுத்தியும் காணிக்கை செலுத்துவதுண்டு. இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக ரூ.200 க்கு விற்கப்பட்ட நெய் காணிக்கை கட்டண விலை ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரிகள், “ ஜிஎஸ்டி வரி விதிப்பால் நெய் காணிக்கை கட்டணம் ரூ.400 ஆக நிர்ணயம் செய்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் நெய் விலையில் மாற்றம் கொண்டுவரப்படும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கோட்ட தலைவர் மகேஷ் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டண நிர்ணயத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். பத்தர்களின் நம்பிக்கையைக் காசாக்கி வருமானத்தை ஈட்டக் கூடாது என்று மகேஷ் கூறியுள்ளார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon