மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

முதல் வெற்றியைப் பதிவு செய்த பெடரர்

முதல் வெற்றியைப் பதிவு செய்த பெடரர்

டென்னிஸ் வீரர்களுக்கு வருடம்தோறும் தொடர்ச்சியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களில் புள்ளிகள் கணக்கிடப்பட்டுத் தரவரிசை வெளியிடப்படும். ஆண்டின் இறுதியில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதிச் சுற்று’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நேற்று (நவம்பர் 11) தொடங்கியது. வருகிற 19ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் தொடரில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தகுதி பெற்றபோதிலும் காயத்தால் விலகினார். எனவே அவருக்கு பதில் 9ஆம் நிலை வீரரான ஜாக் சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடங்கின. தொடக்க நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர், அமெரிக்காவைச் சேர்ந்த 9ஆம் நிலை வீரரான ஜாக் சாக்கை எதிர்கொண்டார். 1 மணி நேரம் 31 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜாக் சாக்கை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார். முதல் செட்டினை எளிதாக வென்ற பெடரர் இரண்டாவது செட்டினைக் கைப்பற்ற நீண்ட நேரம் தேவைப்பட்டது. நாளை (நவம்பர் 14) நடைபெறவுள்ள போட்டியில் முதல் நிலை வீரரான நடால், டேவிட் கோஃபினுடன் மோத உள்ளார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon