மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

நெருக்கடியில் லட்சுமி மேனன்

நெருக்கடியில் லட்சுமி மேனன்

மீண்டும் ரீ என்ட்ரிக்கு தயாராகிவரும் லட்சுமி மேனனுக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.

படிப்பு முடிந்ததும் நடிக்கப் போகலாம் என்று அவருடைய அம்மா சொல்லிவிட்டதால் தனக்கு வரும் பட வாய்ப்புகளை ஏற்க முடியாத சூழ்நிலையில் லட்சுமி மேனன் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே கும்கி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துவந்தார். ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்துக்குப் பிறகு அவருடைய படம் எதுவும் வெளியாகவில்லை.

அவர் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதாகச் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய பிறகு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறும், அது முடிந்த பின்னர் நடிப்பைப் பற்றி யோசிக்கலாம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துவிட்டதால்தான் லட்சுமி, படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.

இது ஒருபுறமிருக்க, லட்சுமி மேனன் தனது உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரிக்கு தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது. பிரபு தேவா நடிக்கும் யங் மங் சங் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon