மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஓரியோ os தீர்வாகுமா?

ஓரியோ os தீர்வாகுமா?

ஸ்மார்ட் போன்களில் பயன்படும் OS-களைக் கண்டறியும் நிறுவனமான கூகுள், அவ்வப்போது புதுமையான அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் ஓரியோ என்ற புதிய OS ஒன்றினை வெளியிட்டது.

ஒரு புதிய OS-ஐ வெளியிடும்பொழுது முன்னர் இருந்த OS-ஐக் காட்டிலும் புதுமையான சில அம்சங்களை உள்ளடக்கி வெளியிடுவது வழக்கம். அதுபோல் இந்த 8.0 ஓரியோ அப்டேட்டில் புதுமையான வடிவமைப்பு கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம். அது மட்டுமின்றி, மொபைல் செயல்பாட்டினையும் மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய OS மூலம் மொபைலில் தேவையில்லாமல் மெமரியைப் பிடித்துக்கொள்ளும் கேட்ச்களை (cache memory) நீக்கம் செய்து மொபைல் போனின் வேகத்தை அதிகப்படுத்த உதவுகிறது.

அது மட்டுமின்றி இந்த OS-இல் பேக்ரவுன்ட் அப்ளிகேஷன்கள் செயல்படாமல் பேட்டரி சக்தியை சேமிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை சீராக வைத்துக் கொள்ளும் வசதியை 8.0.1 அப்டேடில் வழங்கவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது நிரந்தரமான தீர்வு கிடையாது என்றும், இதற்கான தீர்வினை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon