மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

பாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்!

பாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்!

இந்தியாவிலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ரூ.34,000 கோடி செலவில் அதிவேக இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகள் இன்று (நவம்பர் 13) தொடங்குகின்றன.

இந்தியாவிலுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கான இணையச் சேவையை தற்போதுள்ள சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவிகித மலிவு விலையில் வழங்கும் நோக்கத்தில் ரூ.45,000 கோடி செலவில் பாரத் நெட் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. அவை இந்த ஆண்டுடன் நிறைவு பெறவுள்ளது. இதற்காக ரூ.11,200 கோடி செலவில் 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளும் இன்று தொடங்குகின்றன.

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.34,000 கோடியை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டப் பணியில் இடம்பெறாத அஸ்ஸாம், ஹரியானா, சிக்கிம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களில் ஃபைபர் வயர்களைப் பதிக்கும் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் அனைத்துக் கிராமங்களையும் அதிவேக இணைய இணைப்புச் சேவைக்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவு பெறும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.4.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என தொலைத் தொடர்புத் துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரத்நெட் திட்டத்தில் இணைந்து தொலைத் தொடர்புச் சேவை வழங்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon