மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

மீண்டும் வருவேன்: சிம்பு

மீண்டும் வருவேன்: சிம்பு

சக்க போடு போடு ராஜா மற்றும் Demonetization Anthem பாடலுக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் ‘நான் மீண்டும் வருவேன்... நம்புங்கள்’ என்று கூறியுள்ளார்.

சிம்பு தற்போது மணிரத்னம் படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என கமிட்டாகியுள்ளார். சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பின்னணி இசை கோர்ப்பில் பிஸியாக இருக்கிறார். முன்பு, ‘அன்பாதவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் போது எழுந்த சர்ச்சைகளால் சமூக வலைதளத்திலிருந்து சிம்பு வெளியேறினார். அதன் காரணமாக ரசிகர்களின் தொடர்பில் இருந்து தள்ளியே இருந்தார். இந்த நிலையில் நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில், “அனைவருக்கும் வணக்கம். 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாள்களாச்சு; அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். சமூக வலைதளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும்போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன்... நம்புங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon