மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

யுனெஸ்கோ தலைவராக முன்னாள் அமைச்சர்!

யுனெஸ்கோ தலைவராக முன்னாள் அமைச்சர்!

யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு) 11ஆவது தலைவராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாசாரத்துறை அமைச்சர் ஆட்ரி அசூலே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா சபையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் யுனெஸ்கோ அமைப்பின் தற்போதைய தலைவர் இரினா போவாகோவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாசாரத்துறை அமைச்சர் ஆட்ரி அசூலேவின் பெயர் முன்மொழியப்பட்டது. யுனெஸ்கோ தலைவராகப் பதவி வகிக்க அசூலே தகுதியானவர் என்பதால் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.

பல்கேரியாவைச் சேர்ந்த “இரினா பொகோவா” யுனெஸ்கோ அமைப்பின் முதல் பெண் தலைமை இயக்குநராக கடந்த 2009ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இம்மாதத்துடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

இதையடுத்து, வரும் 15ஆம் தேதி அசூலே தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். 2016 முதல் 2017 வரை பிரான்ஸ் நாட்டின் கலாசாரத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆட்ரி அசூலே, யுனெஸ்கோவின் தலைமைப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon