மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

ஆஸ்துமா என்பது மூச்சுப்பாதையில் உருவாகும் இன்ஃப்ளமேஷனால் விளைவது. இதனால் மூச்சுக்குழாய் சுருங்குகிறது. காற்று தடைபடுகிறது. ஆஸ்துமா இருப்பவர்களுக்கு நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்கள் உள்காயத்தால் சிவந்தும் வீங்கியும் காணப்படும்.

ஆஸ்துமா இருப்பவர்கள் விதைகள் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். நட்ஸ் வகைகள் விதைகள்தான் எனினும் தொடக்கத்தில் நட்ஸில் உள்ள மக்னிசியம், பி6 வைட்டமின்கள் தொடக்க நிலை டயட்டில் நட்ஸ் சேர்க்கலாம். கீழ்காணும் டயட்டும் உணவுகளும் ஆஸ்துமாவுக்கு நிவாரணம் அளிக்கும்.

வைட்டமின் சி: வைட்டமின் சி உள்காயத்தைக் குணமாக்கும் சக்தி வாய்ந்தது. எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்கனி முதலானவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர வேண்டும். வைட்டமின் சி ஆஸ்துமா அட்டாக்கின் அறிகுறிகளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது

பி6 வைட்டமின்: பிஸ்தா பருப்பு, கீரை முதலானவற்றில் அதிகம் காணப்படும் வைட்டமின் இது. இது ஹிஸ்டாமைன் உற்பத்தியை மட்டுப்படுத்தி ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்

மக்னிசியம்: பாதாம், கீரையில் காணப்படும் மக்னிசியம் நம் தசைகளை ரிலாக்ஸ் செய்யும். நுரையீரல் தசைகளையும் இது ரிலாக்ஸ் செய்வதால் மூச்சுக்குழாய் பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon