மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

மீண்டும் நிற்கும் 24ஆம் புலிகேசி!

மீண்டும் நிற்கும் 24ஆம் புலிகேசி!

வடிவேலு நடிக்கும் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் மூலம் வடிவேலு கதாநாயகனாக அறிமுகமானார். 2011ஆம் ஆண்டு அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலுவுக்கு அதன்பின் பட வாய்ப்புகள் அமையவில்லை. இவற்றைக் கடந்து, ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 24ஆம் புலிகேசி’ படத்தின் அறிவிப்பு வந்தது.

முதல்கட்டமாக சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கியது. வடிவேலுவின் சம்பளம் தொடர்பான விஷயத்தில் படக்குழுவுக்கும் அவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டது.

தற்போது மற்றொரு பிரச்னை கிளம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “வடிவேலுவின் போட்டோஷூட்டுக்காக பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் மீது படக்குழுவினருக்குத் திருப்தி இல்லை. அதனால், அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்துப் படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். வடிவேலுவும் இதற்கு ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கியது. ஒரு வாரம் ஆன நிலையில், ‘அதே காஸ்டியூமரை நியமித்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன்’ என்று வடிவேலு கூறியுள்ளதாகத் தகவல் பரவி வருகிறது

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon