மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ஏழு பேர் பலி!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: ஏழு பேர் பலி!

ஈராக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (நவம்பர் 12) திடீரென கீழே விழுந்து நொறுங்கியதில் ராணுவ அதிகாரிகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

ஈராக் நாட்டில் ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ-17 ரக ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது கட் மாகாணத்தின் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு பைலட்கள் மற்றும் ஐந்து ராணுவ அதிகாரிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாகினர். தொழிநுட்பக் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மெக்சிகோவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது