மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சென்னை: இன்னொரு இன்னர் மங்கோலியா!

 சென்னை: இன்னொரு இன்னர் மங்கோலியா!

நாம் ஏற்கனவே பார்த்தது போல... சர்வதேச மாநகர வரையறை விதிமுறைகளின்படி ஒரு மாநகரின் மொத்தப் பரப்பில் 33.33 சதவிகிதம் பசுமையாக் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் சென்னை மாநகரில் 144 சதுர கிலோ மீட்டர் பரப்பு பசுமையாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது 9 கிலோ மீட்டர் மட்டுமே பசுமையாக இருக்கிறது.

இதை மேம்படுத்துவதற்குதான் மனித நேயர் மாநகர மேயர் கடுமையான முயற்சிகளை தன் பதவிக் காலத்தில் மேற்கொண்டார். இப்படி ஒரு சர்வதேச வரைமுறை விதி இருக்கிறது, அதன்படி மாநகரத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பசுமையாக இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மனித நேயரின் மூலமாகத்தான் பல அதிகாரிகளுக்கே தெரியவந்தது.

உலகளாவிய பார்வை கொண்ட மனித நேயர் உலகத்தின் பார்வையில் சென்னையையும், சென்னையின் பார்வையில் உலகத்தையும் பார்க்கும் திறன் கொண்டவர். அதனால்தான் அவருக்கு இதுபோன்ற பசுமைத் திட்டங்கள் மீது பேரன்பும் பெரும்பற்றும் இருக்கிறது. இதன் மூலம் இனிவரும் சென்னை வாசிகள் பலன் அடைவார்கள், அடுத்த தலைமுறை சென்னை மக்கள் ஆரோக்கியமான சுகாதாரமான வாழ்வை அடைவார்கள் என்பதே அவரது நம்பிக்கை. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல அடுத்த தேர்தலை வைத்து அல்ல, அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொண்டே சென்னையை செப்பனிட்டார் மனித நேய மேயர்.

சென்னையில், தற்போது 490 பூங்காக்கள், சாலைகளின் நடுவில் உள்ள 149 திட்டு பூங்காக்கள், சாலையில் நடுவில் உள்ள 122 தடுப்புகளில் உள்ள செடிகள் எல்லாம் சேர்த்து, பசுமை போர்வை பரப்பளவு 2.50 ச.கி.மீ., உள்ளது.இவை தவிர, ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை, பள்ளிக்கரணை, சென்னை பல்கலை உள்ளிட்ட வளாகங்களில் உள்ள காடுகளின் பரப்பளவு 4 ச.கி.மீ., இருக்கலாம் என, கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம் மரங்கள், இன்னும் கணக்கிடப்படவில்லை. இந்த நிலையில், பசுமை போர்வையை அதிகரிக்க, 15 லட்சம் மரங்கள் நடுதல், திறந்தவெளி நிலங்களை பூங்காக்கள், வனப்பகுதிகளாக மாற்றுதல் ஆகிய நடவடிக்கைகளை, மாநகராட்சி எடுக்க உள்ளது.

இதற்கிடையே, நகரில் எஞ்சியிருக்கும் பகுதிகளில், 145 புதிய பூங்காக்களை உருவாக்குவதன் மூலம், பசுமை போர்வை பரப்பளவை அதிகரிக்கவும், ஒன்பது மைதானங்களை மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு, 120.67 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. நகரின் வளர்ச்சி கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி கட்டணமாக சி.எம்.டி.ஏ., வசூலித்து வைத்துள்ள நிதியில் இருந்து, இந்த தொகையை பெற மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது என்கிறது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்த நாளிதழ் செய்தி.

இயற்கையை சூறையாடியதன் விளைவை சமீபத்தில் சென்னை மாநகரம் கண்ட பெருவெள்ளம் நமக்கு உணர்த்தியது. அது கடுமையான துயரத்தை மட்டுமல்ல, இயற்கையை பாதுகாப்பதின் அவசியத்தையும் மக்களிடம் போதித்துச்சென்றுள்ளது.சென்னை மாநகரில் கான்கிரீட் கட்டுமானங்கள் கடந்த 20 ஆண்டுகளில் 22 விழுக்காடு பசுமைப் போர்வையை அரித்துள்ளன. அதை மீட்கும் முயற்சியில் கடுமையாக இறங்கினார் மனித நேயர்.

நகரமயமாக்கலின் தாக்கத்தினால் 2026-ஆம் ஆண்டு 36 விழுக்காடு பசுமை நிலங்கள் கான்கீரிட் கட்டுமானங்களாக மாறப்போகிறது என்ற தகவல் சென்னை நகரை மேலும் வெப்பமயமாக்கும். இது ஆரூடத்தின் அடிப்படையிலோ, நம்பிக்கையின் அடிப்படையிலோ கணிக்கப்பட்டதல்ல. மாறாக, பெங்களூருவில் அமைந்த இந்திய விஞ்ஞான நிறுவனம் கூறும் ஆய்வு தகவல் தான் இது. 1991, 2000, 2012 ஆண்டுகளில் தொலையுணர்வு செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள சென்னை நகரின் மேற்பரப்பு புகைப்படங்கள் அடிப்படையிலும், சென்னையின் நிர்வாக எல்லைகள், பறந்து விரிந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. பெரு மழைபெய்தால் நீர்நிலைகளுக்கு செல்லும் ஓடைகள், கால்வாய்கள் கட்டிடங்களாக மாறிவிட்டன. இதனால் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் போன்றவை ஏற்பட்டால் புறநகர்ப்பகுதிகள் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.

மனித நேயர் தன் பதவிக் காலத்தில் மாநகரில் மரம் நடுதல், பூங்காக்களை விரிவுபடுத்துதல், பனைமரம் நடுதல், குப்பைக் கிடங்குகளில் மர விதைகளை தூவுதல் என்று வெவ்வேறு பார்வைகளில் ஒரே கண்ணோட்டத்தில் சென்னையின் பசுமையை மீட்க தனது பதவிக்காலத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்,.

சீனாவின் Inner Mongolia மாகாணம் பசுமை நகரமாக மாற்றப்பட்டுள்ளது. பசுமைப்போர்வை போர்த்தியது போன்று தோற்றமளிக்கும் இந்த நகரம் பலரையும் ஈர்த்துள்ளது. சீன ஆளுகைக்கு உட்பட்ட Inner Mongolia மாகாணத்தை முற்றிலுமாக பசுமையாக மாற்றி அந்நாட்டு அரசு சாதனை படைத்துள்ளது. அங்குள்ள சாலைகள், பூங்காக்கள் உள்பட காணும் இடமெல்லாம் பசுமையான மலர்செடிகள், புல்வெளிகள் மற்றும் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் மனதிற்கு இதமளிக்கும் செயற்கை நீருற்றுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இதமான அனுபவத்தை பெற பலரும் இந்நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

ஆக இன்னொரு இன்னர் மங்கோலியாவாக சென்னையை ஆக்குவதான் மனித நேயரின் பசுமை முயற்சி. மனித நேயர் மேற்கொண்ட பசுமை முயற்சிகள் எல்லாம் இன்னும் பத்து வருடங்களுக்கு மேல்தான் நமக்குத் தெரியும்!

தயாராவோம்.... சைதையாரின் இன்னும் பல சாதனைச் சிறகுகளோடு சென்னை வானத்தில் பறக்க...

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon