மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

இந்தியாவில் சமத்துவம் இல்லை!

இந்தியாவில் சமத்துவம் இல்லை!

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) நடத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

“கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பானவற்றில் கடந்த சில ஆண்டுகளாகக் கல்வியின் தரம் மற்றும் சுகாதார சேவை கிடைப்பதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் மக்களின் வருவாய் சமமற்று காணப்படுகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது” என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.எம்.எஃப். நிதிகள் விவகாரத் துறை இயக்குநர் விட்டர் காஸ்பர் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த குடிமக்களைக் கவனித்தால் சமத்துவமின்மை என்பது கடந்த 30 ஆண்டுகளாக வேகமாக அதிகரித்துவருகிறது. இந்த இடைவெளி என்பது 19ஆம் நூற்றாண்டுகளிலேயே வளரத் தொடங்கிவிட்டது" என்றார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமத்துவமின்மை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு தரப்பினருக்குமான வருவாய் மாறுபட்டுக் காணப்படுகிறது. ஒரே நாட்டில் அனைத்து மக்களுக்குமான ஊதியம் என்பது அவரவர் பணிகளைப் பொறுத்து மிகப் பெரிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் கூடுதலாக முதலீடு செய்வதன் மூலம் இப்படிப்பட்ட சமத்துமின்மையைக் குறைக்கலாம். நிதி மேலாண்மை வளர்ச்சியை அதிகரிக்கச் சிறந்த ஆயுதமாகும். எனவே சிறந்த நிதி மேலாண்மைக் கொள்கைகளை வகுப்பது முக்கியமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon