மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி!

ரயில்வே மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி!

ரயில்வே துறையின் பல்வேறு உற்பத்திப் பிரிவுகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி வரையில் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சரான பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் நடந்த இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசுகையில், “ராய்பரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையின் உற்பத்தி அளவை ஆண்டுக்கு 5,000 பெட்டிகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா ரயில் பெட்டி ஆலை உற்பத்தி அளவு தற்போது 5,500 ஆக உள்ளது. இதை 8,000 வரையில் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் உற்பத்திக்காக ரூ.2,000 கோடி வரையில் முதலீடு செய்யப்படும்” என்றார்.

மத்திய ரயில்வே வாரியத்தின் உறுப்பினரான ரவீந்திர குப்தா இது குறித்துக் கூறுகையில், “ரயில்வே துறையின் ரூ.2,000 கோடி முதலீட்டில் பெரும் பங்குத் தொகையானது சென்னையிலுள்ள ஐ.சி.எஃப். ஆலை உற்பத்திச் செலவுக்காக ஒதுக்கப்படும். ராய்பரேலி ஆலை மேம்பாட்டுக்கு ஒன்றரை ஆண்டுகள் வரையில் ஆகலாம். அதற்குள் அந்த ஆலையின் உள்கட்டுமான வசதிகள் அனைத்தும் முழுமைபெற்றுவிடும். 2019-20 நிதியாண்டுக்குள் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் நிறைவேற்றப்படும். மேற்கூறிய பணிகள் சரியான சமயத்தில் முடிக்கப்பட்டு, சரியான சமயத்தில் தொகை செலுத்தப்பட்டால் ரயில்வே துறைக்கு கொள்முதல் செலவில் 40 சதவிகிதம் வரையில் மிச்சமாகும்” என்று கூறியுள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon