மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

டாம் அன்ட் ஜெர்ரியும் பழனிசாமியும் பன்னீரும் : அப்டேட் குமாரு

டாம் அன்ட் ஜெர்ரியும் பழனிசாமியும் பன்னீரும் : அப்டேட் குமாரு

டெங்கு கொசு மாதிரி சின்ன வேலையெல்லாம் நம்மட்ட கொண்டு வராதீங்க. சிங்கக் குட்டிக்கு பேர் வைக்குறது மாதிரி பெரிய மேட்டரா கொண்டு வாங்கன்னு எடப்பாடி பீல் பண்ணிருப்பாரு. ஜெயலலிதா பேர் வைக்கும் போது கூட ஜான்சின்னு தான் வச்சார். நம்ம ஆளு பேர் வைக்குறதுல கூட விசுவாசத்தை காட்டனும்னு ஒருபடி மேல போய் ‘விஷ்ணு’ன்னு வச்சுருக்காரு. ஓ.பி.எஸ் சும்மா இருப்பாரா தனது பரிவாரங்களை அழைத்துக்கொண்டு நேரா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துட்டாரு. எதுக்குப்பா மோடியை பார்த்தாருன்னு கேட்டா தீபாவளி போனஸ் வாங்கப் போயிருப்பாருன்னு சொல்றாங்க நம்ம நெட்டிசன்ஸ். அது எதுவானாலும் இருந்துட்டு போகட்டும். தமிழ் நாட்டு அரசியல்ல செல்லூர் ராஜு சோலாவா காமெடி பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டுருக்காருன்னு பார்த்தா பழனிச்சாமியும் பன்னீரும் சேர்ந்து டாம் அன்ட் ஜெர்ரி விளையாடிக்கிட்டு இருக்காங்க. தேவையில்லாம நாமளும் புலம்புறதை விட்டுட்டு காமெடியை பார்த்து என்ஜாய் பண்ணுவோம். அப்படியே அப்டேட்ட பார்த்துட்டு போயிருங்க.

Syed Rizwan

வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது..

-செல்லூர் ராஜு

நோபல் லட்சியம்!

பாரத ரத்னா நிச்சயம்!

கருப்பு கருணா

பிரதமருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை : ஓ பி எஸ்

தீபாவளி இனாம் வாங்கப்போனாராம்பா!

Boopathy Murugesh

ATM கார்ட் லாக்கானதால் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த ரஷ்ய வாலிபர் - செய்தி

மோடி ஆட்சிக்கு வந்தா வெள்ளைக்காரன்லாம் இந்தியாக்காரன்ட்ட பிச்சை எடுக்குற நெலைமை வரும்ன்னு சொன்னீங்களே.. அது இது தானா

Rajayogiahgtwa1

ஓட்டலில் சோறுக்கு பதிலாக வெந்நீரில் நனைந்த அரிசி போடுறாங்களே ஏன் ?

MJ_twets

சினிமாவுக்குள் நுழைகிறார் வைகோ ;

ஏன் இதுவரை அரசியல்ல உடைச்ச கூட்டணி எல்லாம் போதாதா ?

#கேப்டன்_நவ்

வாசுகி பாஸ்கர்

மாநாட்டுக்கு chair வாடகைக்கு விட்டால், சேதாரம் இல்லாமல் எல்லா chair ம் போனது போனபடி அப்படியே திரும்பி வருவது பாஜக மாநாட்டில் தான் என்று பிளாஸ்டிக் chair வாடகை விடும் சங்கம் பெருமிதம்.

- Why i love BJP

palanikannan

எடப்பாடி தொப்பி போடாத எம்.ஜி.ஆர் - தங்கமணி

இந்த மாதிரிலாம் பேச சொல்லி யாருப்பா உங்களுக்கு கான்செப்ட் கொடுக்குறது?

ரசிகன்

வாரம் வாரம் டவுன்பஸ் ஏறி டெல்லி போறதுக்கு பதிலா நேரடியா ஆட்சிய மோடிக்கிட்டேயே கொடுத்துடலாமே. எங்கபோனாலும் அடிமை சாசனம்தான்.

ameerfaj

எல்லா சிக்கல்களும் ஓய்ந்த பிறகு தான் சிரிப்பேன்னு நினைச்சா இங்க யாராலும் சிரிக்கவே முடியாது...💭

#நிதர்சனம்

SweetHeart

டெங்குவை தடுக்க கிருமி நாசினியான சாணத்தை வீடு முன் தெளிக்கலாம்-செல்லூர் ராஜூ

சிங்கம் மாதிரி போயி தெர்மாகோல் போட்டது போல இதையும் நீங்களே......

கருப்பு கருணா

இன்னும் ரெண்டு வருசம் இருக்கே...பார்த்துக்கலாம்ன்னு பொறுமையா இருந்தீங்கன்னா... மீண்டும் ஆமைதான் ஜெயிக்கும்.

இது முயல்களுக்கான எச்சரிக்கை!

ShivaP

பட்டாசை வெடிக்க ஊதுபத்தி வாங்குவதற்காகத்தான்

பெரியமனசு செய்து பெட்ரோலின் விலையை 2ரூபாய் குறைத்துள்ளார்களென நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்

ajmalnks

தமிழகம் வரும் மத்திய மருத்துவ குழு: ஓ.பி.எஸ்

அந்த அம்மாவுக்கும் இதே டயலாக்தான் சொன்னாய்ங்க...

samyesudoss

சினிமாவுக்குள் நுழைகிறார்- வைகோ

அரசியலுக்கு வந்து விட்டேன் - கமல்

கமல் இடத்த நிரப்ப சினிமாவுக்கு வந்துட்டாரு போல

amuduarattai

பண்டிகைகளுக்கு பெரியவர்கள் ஆடைகள் வாங்க மாட்டார்கள் என்று நினைத்து தான், அதற்குமான விலையைச் சேர்த்து, குழந்தைகளின் ஆடைகளை விற்கிறார்கள் போல.

Kannan

எஸ்கலேட்டர்ல ஏறியும் வேகமா படி ஏறி போற அளவுக்கு துரத்துது வாழ்க்கை.

kalpbagya

நான் படிக்கும்போது செய்யாத பலநாள் வீட்டுப்பாடம் இன்று என் குழந்தையை கைபிடித்து தினம் செய்யவைக்கிறது விதி வலியது!!

வாசுகி பாஸ்கர்

ரோபோட் 2 படத்தின் பாடல் காட்சிகள் எடுக்க ஆரம்பித்து இருக்கிறோம் - ஷங்கர்

Visual ல சேர்த்து வச்ச காசையெல்லாம் பாட்டுல கரியாக்கி பிரம்மாண்டம்’ன்னுவார், Start Music, இமயமலை பூராம் பெயிண்ட் அடி

inban

மதுபான விலை உயர்வு.

அரசு ஊழியர் சம்பள உயர்வு..

ஆக,ஆசிரியர்களுக்கே அவர்கள் திருந்தமாட்டான்னு அடிச்சு அனுப்பிய குடிகாரர்கள் தான் சம்பளம் தருகிறார்கள்

saravananucfc

டெங்குவை தடுக்க சாணத்தை வாசலில் தெளிக்கலாம்;செல்லூர் ராஜூ

வாசல் மட்டும் தான் கொசுவுக்கு வழினு நினைத்து வாழும் அந்த அப்பாவி ஜீவனுக்கு ஆமென்.

HAJAMYDEENNKS

ஜவுளிக்கடைகளில் ஒரு சின்ன இடத்தை ஒதுக்கி சலூன் கடை வச்சிருந்தால் ஆண்களுக்கு முடி வெட்ட ஒதுக்குற நேரமாச்சும் மிச்சமாகும்...!

HAJAMYDEENNKS

இளவேனிற் காலம்

கோடை காலம்

இலையுதிர் காலம்

டெங்கு காலம்

தமிழகத்தில் பருவகாலங்கள்...!

karunaiimaLar

சம்பாதிக்க ஆரம்பிக்காத வரை எல்லா பண்டிகையையும் சந்தோஷமா கொண்டாடியிருப்போம்

Tamil_Zhinii

நடிகர் சந்தானம் படத்தை ஓடவிட மாட்டோம் - இந்து முன்னனி

சந்தானத்தையும் தலைவனாக்காம விடமாட்டாங்க போல..

வாசுகி பாஸ்கர்

பாரம்பரிய மருத்துவத்தை போதித்த நம்மாழ்வார் 75 வயசுல இறந்தார்.

அறிவுக்கு உட்பட்ட உலக கண்டுபிடிப்புகள் எதையும் உள்வாங்கி கொண்டு, அறிவுக்கு உட்படாத பழமையை தூக்கியெறி ன்னு சொன்ன பெரியார் 94 வயசு வரை வாழ்ந்தார்.

MJ_twets

முன்னெல்லாம் பட்டாசைப் பற்ற வைத்தால் தான் வெடிக்கும். இப்போதெல்லாம் பட்டாசின் விலையை கேட்கும் போதே வெடிக்கிறது..,

palanikannan

டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்-முதல்வர்

உங்களால பண்ண முடியாது, எங்க அண்ணன் செல்லூரார்கிட்ட கேளுங்க, ஏதாச்சும் ஐடியா சொல்லுவாரு

amuduarattai

டெங்குக் காய்ச்சலை தடுக்க அரசு எடுத்து வரும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று, டெங்கு பாதிப்பை குறைத்து காட்டுவது.

-லாக் ஆஃப்

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon