மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிங்கக்குட்டிக்குப் பெயரிட்ட முதல்வர்!

சிங்கக்குட்டிக்குப் பெயரிட்ட முதல்வர்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்து எட்டு மாதங்களான சிங்கக்குட்டிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கிய வர்தா புயலில் அதிகம் சேதமடைந்த இடங்களில், வண்டலூர் உயிரியல் பூங்காவும் ஓன்று. பூங்காவில் இருந்த பழமையான மரங்களும் வேரோடு சாய்ந்தன.இதைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் வன உயிரியல் ஆராய்ச்சிக்கென்று தனியாக கட்டிடமும் கட்டப்பட்டது.

இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று (அக்டோபர் 12) நடைபெற்ற நிகழ்வில், 7.31 கோடி செலவில் கட்டப்பட்ட வன உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் 2011ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஒரு சிங்கக்குட்டிக்கு ஜான்சி என்று பெயரிட்டார். அந்த ஜான்சி வளர்ந்து தற்போது ஒரு சிங்கக்குட்டியை ஈன்றுள்ளது. அந்த சிங்கக்குட்டிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'விஷ்ணு' என்று பெயரிட்டார். பெயரையும் மூன்று முறை உச்சரித்தார். நிகழ்வில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon