மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ரஹ்மான் ஸ்டுடியோவில் `2.0'!

ரஹ்மான் ஸ்டுடியோவில் `2.0'!

ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் `2.0' படத்தின் மற்ற காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு ஒரே பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ளது. இதன் படப்பிடிப்பை மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் படமாக்கிவருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.

படத்தின் நாயகியாக ஏமி ஜாக்சன் நடித்துவரும் இதில் மாறுபட்ட கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் அக்ஷய் குமார். கிளிம்ப்செஸ் மற்றும் மேக்கிங் வீடியோ என இதன் ஒவ்வொரு அறிவிப்பும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொதுவாக ஷங்கர், பாடல் காட்சிகள் என்றால் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டுவிடுவார். ஆனால் இந்த கடைசி பாடலுக்காகச் சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சென்னை அடுத்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்யவேடுவில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் `ஒய் எம்' ஸ்டுடியோவில் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27ஆம் தேதி துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கிலும், இதன் டீசர் வெளியீட்டு விழா நவம்பர் 22ஆம் தேதி ஐதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா அரங்கத்திலும், ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை ரஜினியின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையிலும் நடத்த திட்டமிட்டுவருகின்றனர். ஹாலிவுட் படத்திற்கு நிகராக 3Dயில் உருவாகி வரும் இப்படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதுவரை ஏமி ஜாக்சன் குறித்த எந்த போஸ்டரும் வெளிவராது இருந்தது. நேற்று (அக்டோபர் 11) ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஏமியின் கேரக்டர் போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ஏமி ஜாக்சன் போஸ்டர்

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon