மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம்!

பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம்!

பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நகர்த்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. நிதி ஆயோக்கின் உறுப்பினரான பிபெக் டெப்ராய் இக்குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். நிதிப் பற்றாக்குறையையும், கடன்களையும் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளிலிருந்து அரசு தடம் மாறக்கூடாது என்று பொருளாதார ஆலோசனைக் குழு நம்புவதாக அதன் தலைவர் பிபெக் டெப்ராய் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்ட பிறகு அதன் முதல் கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததற்கான காரணங்கள் குறித்து குழுவின் உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து இருப்பதாக பிபெக் டெப்ராய் தெரிவித்தார். ஆனால், சரிவுக்கான காரணங்கள் என்னவென்பது பற்றி அவர் பேச மறுத்துவிட்டார். கவனம் செலுத்தப்பட வேண்டிய பத்து பிரச்னைகள் இக்கூட்டத்தில் பட்டியலிடப்பட்டது. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, அமைப்பு சாரா துறையை அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் ஒருங்கிணைப்பது, நிதி கட்டமைப்பு, பணவியல் கொள்கை, அரசின் செலவுகள், வேளாண்மை, நுகர்வு மற்றும் உற்பத்தி முறை ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும். பொருளாதார ஆலோசனைக் குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் மாதம் நடைபெறும் என்று டெப்ராய் தெரிவித்தார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon