மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்குள் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று (அக்டோபர் 12) செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்” என்று கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று (அக்டோபர் 11) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு :

ஒகேனக்கல் 17 செ.மீ., தேன்கனிக்கோட்டை, செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்) தலா 10 செ.மீ., குடியாத்தம், சூளகிரி, மேலலாத்தூர் தலா 9 செ.மீ., பெண்ணாகரம் 8 செ.மீ., மறந்தகள்ளி, வாடிப்பட்டி, உளுந்தூர்பேட்டை, ராசிபுரம், ஏற்காடு, அரியலூர், ராயக்கோட்டை, பரமத்திவேலூர், சேலம் தலா 7 செ.மீ., செங்கம், அரக்கோணம், துறையூர், நாமக்கல், தாத்தையங்கார்பேட்டை, பெனு கொண்டாபுரம், கள்ளக்குறிச்சி தலா 6 செ.மீ., திருப்பத்தூர், ஆலங்காயம், விரிஞ்சிபுரம், தளித் தலா 5 செ.மீ., தாளவாடி, ஓமலூர், ஆத்தூர், வேலூர், பள்ளிப்பட்டு தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் 60க்கும் மேற்பட்டஇடங்களில் மழை பதிவாகி உள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon