மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஹாரரில் மிரட்டும் சாந்தினி

ஹாரரில் மிரட்டும் சாந்தினி

கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான `சித்து +2' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்கள் நாயகியாக நடித்த அவர், `மை டியர் லிசா' என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டில் நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா முதலானோர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற பேய் படம் ‘மை டியர் லிசா’. தற்பொழுது அதே தலைப்பில் உருவாகி வரும் இதில் சென்ற வருடம் வெளியான அச்சமின்றி படத்திற்குப் பிறகு விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்க, ரமேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.

மயில் சாமி, சுவாமிநாதன், பர்னிகா சந்தோக் மற்றும் விஜய் டிவியில் காமெடி செய்து வரும் சிலரும் நடித்து வருகிறார்கள். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இதற்கு டி.எம்.உதயகுமார் இசையமைப்பாளராகவும், ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிகிறார்கள்.

பலூன் படத்தில் நடித்திருப்பதோடு வணங்காமுடி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களிலும் சாந்தினி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மை டியர் லிசா போஸ்டர்

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon