மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

தெலங்கானா அரசு திட்டத்தில் ரகுல்

தெலங்கானா அரசு திட்டத்தில் ரகுல்

சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் நேற்று (அக்டோபர் 11) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தெலங்கானாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஒருங்கிணைத்த நிகழ்வில் ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வில் தெலங்கானாவின் ‘பெட்டி பச்சோ பெட்டி பாதோ’ என்ற திட்டத்தின் விளம்பர தூதராக ரகுல் நியமிக்கப்பட்டார். “இளம் பெண்கள் தன்னம்பிக்கையுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் தங்களது குறிக்கோளை அடைய வேண்டும். பெண்கள் மட்டுமே பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதை செய்து முடிக்கிற திறமைக்காக நாம் பெருமை கொள்ள வேண்டும். குடும்பங்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும், அவர்களுக்காக தியாகம் செய்ய தயங்கக் கூடாது. தன்னம்பிக்கை அளவை எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கவேண்டும்” என்று ரகுல் ஊக்கமளிக்கும் விதமாக பேசினார்.

நிகழ்வில் எம்.எல்.ஏ ராமச்சந்திர ரெட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் செயலாளர் ஜெகதீஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ரகுல் பரிசுகளை வழங்கினார்.

இதுகுறித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், “முக்கியமான திட்டத்தில் என்னையும் இணைத்த தெலங்கானா அரசுக்கு மிகவும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon