மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை!

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று (அக்டோபர் 11) அறிவித்துள்ளது.

2007 - 2008ஆம் கல்வி ஆண்டில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழை மாணவர்கள் இடைநிலைக் கல்வியினைத் தொடர்ந்து பயில்வதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம், “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தேர்வு செய்யும் வகையில் என்எம்எம்எஸ் (NMMS) தேர்வு வட்டார அளவில் நடத்தப்படும். இத்தேர்வு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை (அக்டோபர் 13) முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளித் தலைமையாசிரியரிடம் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு இந்திய அளவில் 1,00,000 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon