மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஆடைகள் விற்பனையில் சரிவு!

ஆடைகள் விற்பனையில் சரிவு!

ஆடைகள் தயாரிப்பு மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்களின் வருவாய் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜி.எஸ்.டி. சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்று தொழில் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இது குறித்து டெக்னொபாக் ஆலோசனை நிறுவனத்தின் சில்லறை மற்றும் நுகர்வோர் பொருட்கள் பிரிவின் மூத்த துணைத் தலைவரான அன்குர் பிசென் பேசுகையில், “இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதால் விநியோக அமைப்பில் ஏற்பட்ட சிக்கல்கள். நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் விற்பனையாளர்கள் விநியோகத்துக்குத் தயாராக இல்லை. இதனால் விற்பனையில் சரிவு ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இரண்டாவதாக, ஷ்ரத் மற்றும் நவராத்திரி / துர்கா பூஜை ஆகிய பண்டிகைகள் ஒரே மாதத்தில் வந்துவிட்டதால் செப்டம்பர் மாதத்தில் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யால் பழைய பொருட்களை விற்றுத் தீர்க்க வேண்டிய கட்டாயமும் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதனால் பொருட்களின் விற்பனை அளவு அதிகமாக இருந்தாலும், மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon