மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

பண்டிகைக் காலம்: ரூ.30,000 கோடி செலவாகும்!

பண்டிகைக் காலம்: ரூ.30,000 கோடி செலவாகும்!

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டதால், மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்க ஆன்லைன் வாடிக்கையாளர்கள் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட வாய்ப்புள்ளதாக அசோசம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அசோசம் அமைப்பின் பொதுச் செயலாளரான டி.எஸ்.ராவத் கூறுகையில், “அதிவேக இணைய வசதிகளின் வளர்ச்சி அதிகமாகியுள்ளதால், சிறு நகரங்களில் வசிப்பவர்களிலும் கூட ஏராளமானோர் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஏதுவாக உள்ளது. மேலும், நாட்டின் ஸ்மார்ட்போன் பயன்பாடு நல்ல வளர்ச்சியடைந்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, சண்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய நகரங்களில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களில் 65 சதவிகிதம் பேர் ஆண்களாகவும், 35 சதவிகிதம் பேர் பெண்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon