மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

70% ஓட்டுநர்களுக்கு கண் பார்வைக் குறைவு!

70%  ஓட்டுநர்களுக்கு கண் பார்வைக் குறைவு!

லாரி ஓட்டுநர்களில் 70 சதவிகிதம் பேருக்குக் கண் பார்வைக் குறைவாக இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குருகிராமில் உள்ள கெர்க்கி தௌலா நெடுஞ்சாலை சுங்கக் கட்டண வசூலிப்பு மையத்தில் லாரி ஓட்டுநர்களுக்கான கண் பார்வை சோதனை முகாமை நடத்தியது. இதில் 70 சதவிகித லாரி ஓட்டுநர்களுக்குக் கண் பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

சுமார் 7௦௦ ஓட்டுநர்கள், நடத்துநர்கள், உதவியாளர்களிடம் நடத்திய சோதனையில் 500 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5௦ பேருக்கு 2௦ முதல் 3௦ அடி தூரம் வரை கூட தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓட்டுநர்களைப் பரிசோதனை செய்த கண் மருத்துவர் வருண் குமார் கூறுகையில், “பெரும்பாலான லாரி ஓட்டுநர்களுக்குக் கண் பார்வைக் குறைவாக உள்ளது. இவர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் கண்பார்வை பிரச்னைகள் கூடச் சாலை விபத்து ஏற்பட ஒரு காரணமாக உள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 400விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் விபத்துகளுக்கும், பார்வைக் குறைவுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்படவில்லை. எனினும் தற்போது நடத்தப்பட்ட சோதனை இதற்கான தேவையை உணர்த்துகிறது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon