மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஹீரோ: 20 லட்சம் பைக் விற்பனை!

ஹீரோ: 20 லட்சம் பைக் விற்பனை!

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 20 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ’ஹீரோ மோட்டா கார்ப்’ டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. தசரா, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. பண்டிகைக் காலச் சிறப்பு விற்பனையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

நடப்பு 2017-18 நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டு விற்பனை விவரங்களை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும், குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் மட்டும் 7 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பிளெண்டர், கிளாமர், பேசன், ஹெச்.எஃப். டீலக்ஸ், டூயட், பிளெஸ்ஸர் ஸ்கூட்டர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. ஹீரோ பிராண்டுகளுக்கான தேவை இந்த ஆண்டில் அதிகமாக இருந்ததால் இருசக்கர வாகனங்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon