மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

டெங்கு நோயாளிகள் போராட்டம்!

 டெங்கு நோயாளிகள் போராட்டம்!

அரியலூர் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் மருத்துவக் குழு கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தினமும் காலையில் மட்டும்தான் வந்து சிகிச்சை அளித்துச் செல்வதாகவும், அதன் பிறகு நோயாளிகளின் நிலைஎன்ன என்பதை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதற்கு யாரும் வருவதில்லை எனவும் கூறி, டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று (அக்டோபர்11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களுக்குச் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், செவிலியர்கள் நோயளிகளைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும், மிரட்டுவதாகவும், ஒரே ஊசியைப் பல நோயாளிகளுக்கும் பயன்படுத்துவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இனி இதுபோலத் தவறுகள் நடைபெறாது எனத் தலைமை மருத்துவர் ரமேஷ், நோயாளிகளிடம் தெரிவித்தார். செவிலியர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, நோயாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு மருத்துவமனைக்குள் சென்றனர்.

பொதுவாக நோயாளிகளுக்கு ஒழுங்கான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயாளிகளின் உறவினர்கள்தான் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகளில் நிகழும் அவலத்தால் நோயாளிகளே போராட்டத்தில் ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon