மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிறு தீவில் நிக்கி நடனம்!

சிறு தீவில்  நிக்கி நடனம்!

நெருப்புடா படத்திற்கு பின் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் படம் பக்கா. அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கும் இந்த படம் முக்கோணக் காதல் கதையை காமெடியாகக் கூறும் படமாக உருவாகிவருகிறது.

பிந்து மாதவி, சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் குறித்து இயக்குநர் சூர்யா டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “படம் முழுக்க ரசிகர்கள் மனம் விட்டு சிரிக்கக்கூடிய விதத்தில் இருக்கும். வில்லனோ வேறு எந்த நெகட்டிவ் சமாச்சாரங்களோ கிடையாது. நிக்கி கல்ராணி ரஜினி ரசிகர் மன்றத் தலைவியாகவும் விக்ரம் பிரபு தோனி ஃபேன்ஸ் கிளப் தலைவராகவும் வருகின்றனர். படத்தின் இரண்டாம் பாதி முழுக்க திருவிழா செட்டப்பில் உருவாகியுள்ளது. பிந்து ஜமீன்தார் மகளாக வருகிறார். முக்கோணக் காதல் கதை உருவாகிறது. சூரி, விக்ரம் பிரபு திருவிழாவில் பொம்மை விற்பவர்களாக வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. மரக்காணம் அருகில் உள்ள சிறு தீவில் ஒரு பாடல் காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. அதை தினேஷ் நடன இயக்கம் செய்தார். படத்தில் இந்த பாடல் மிகவும் பேசப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon