மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிறை திரும்பும் சசிகலா

சிறை திரும்பும்  சசிகலா

ஐந்து நாட்கள் பரோலில் சென்னை வந்த சசிகலா, பரோல் முடிவடைந்ததையொட்டி, தொண்டர்களின் வழியனுப்புதலுடன் இன்று தி.நகரிலிருந்து பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்.

உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்த 'புதிய பார்வை' ஆசிரியரும், சசிகலா கணவருமான நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதைத் தொடர்ந்து, தனது கணவரைப் பார்ப்பதற்காக 15 நாட்கள் பரோல் கோரி சசிகலா விண்ணப்பித்திருந்தார். சிறை நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளுடன் ஐந்து நாட்கள் மட்டுமே பரோல் வழங்கியது. கடந்த 6ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த சசிகலாவைச் சிறை வளாகத்தில் தினகரன் வரவேற்று அழைத்து வந்தார். சாலை வழியாகவே சென்னை வந்த சசிகலா, தி.நகரிலுள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். தி.நகர் இல்லத்திலிருந்து ஐந்து நாட்களும் தினமும் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனைக்குச் சென்ற சசிகலா, நடராஜனின் உடல்நிலையை கவனித்துவந்தார்.

சசிகலாவுக்கு பரோல் முடிவடைந்ததையொட்டி, இன்று (அக்டோபர் 12) காலை தி.நகரிலுள்ள கிருஷ்ணப்பிரியா இல்லத்திலிருந்து பெங்களூரு சிறைக்குப் புறப்பட்டார். அவரைப் பார்பதற்காக தினகரனின் ஆதரவாளர்கள் குவிந்தனர். சசிகலாவை தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசிய பின், கார் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon