மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: நேர்காணல் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: நேர்காணல் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி நடத்திய நான்கு போட்டித் தேர்வுகளுக்கான நேர்காணல் தேதி நேற்று (அக்டோபர் 11) அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா, “குரூப்-3 தேர்வில் அடங்கிய கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில் இருந்த 24 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2013ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46,797 பேர் கலந்துகொண்டனர். இதில், தேர்வான 51 பேருக்கு வரும் 30ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.

தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு பெற்ற 66 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையில், 14 உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற 12 பேருக்கு அக்டோபர் 26ஆம் தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.

சிறை அதிகாரி பணியில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 3,619 பேர் கலந்துகொண்டனர். இதில் தேர்ச்சி பெற்ற 18 பேருக்கு அக்டோபர் 27ஆம் தேதி தேதி நேர்காணல் நடைபெறவுள்ளது.

புவியியலாளர், உதவிப் புவியியலாளர் பணியில் 53 இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016ஆம் ஆண்டு ஜூன் 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற 141 பேருக்கு நவம்பர் மாதம் 6,7ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்னும் தேர்வாணைய இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon