மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிம்பு - யுவன் கூட்டணியில் காதல் தேவதை!

சிம்பு - யுவன்  கூட்டணியில் காதல் தேவதை!

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிவந்தார் சிம்பு. தற்போது சிம்புவின் இசையில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். காமெடி நடிகரிலிருந்து நாயகனாக வளர்ந்திருக்கும் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தில்தான் இந்த இசைக் கூட்டணி இணைந்திருக்கிறது. ஏற்கனவே கலக்கு மச்சான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, மற்றொரு மெலடி பாடலான காதல் தேவதை ப்ரோமோ பாடல் நேற்று (அக்டோபர் 11) வெளியானது.

ஜி.எல்.சேதுராமன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கிறார். இவர்களுடன் விவேக், விடிவி கணேஷ், சஞ்சனா சிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ‘விடிவி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் விடிவி கணேஷ் தயாரித்துவருகிறார்.

படத்தில் இடம்பெறும் ‘காதல் தேவதை’ எனும் பாடலின் ப்ரோமோ வெளியாகி 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பாடல்களையும் வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.

காதல் தேவதை ப்ரோமோ பாடல்

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon