மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

நேரடி வரி வருவாய் அதிகரிப்பு!

நேரடி வரி வருவாய் அதிகரிப்பு!

கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் 15.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017 செப்டம்பரில் நேரடி வரி வருவாய் 15.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.3.86 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நேரடி வரி வசூல் ரூ.4.66 லட்சம் கோடியாக உள்ளது. இது 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - செப்டம்பர் வருவாயை விட 39.4 சதவிகிதம் கூடுதலாகும். மேற்கூறிய காலகட்டத்தில் முன்கூட்டிய வருமான வரித் தாக்கல் வாயிலான வருவாய் ரூ.1.77 கோடியாக உள்ளது. இது 2016ஆம் ஆண்டைவிட 11.5 சதவிகிதம் அதிகமாகும். இதில் தனிநபர்களால் முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரி வருவாய் 30.1 சதவிகிதமும், கார்ப்பரேட் நிறுவனங்களால் முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரி வருவாய் 8.1 சதவிகிதமும் உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட ஜூலை மாதத்தில் வரி வருவாய் 19 சதவிகிதம் உயர்ந்து ரூ.1.90 லட்சம் கோடியாக இருந்ததோடு, அதைத் தொடர்ந்த மாதங்களிலும் வரி வருவாய் 21 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon