மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

வங்கித் துறையில் மறுகட்டமைப்பு: ஜெட்லி

வங்கித் துறையில் மறுகட்டமைப்பு: ஜெட்லி

வங்கித் துறையின் திறனை மறுகட்டமைப்பு செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஒரு வாரப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். போஸ்டன் நகரில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் மாணவர்களிடம் அருண் ஜெட்லி கலந்துரையாடினார். அப்போது அவர், “இன்றளவில் உலகளாவிய வளர்ச்சி வேறு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வங்கித் துறையை திறமையாகக் கையாள நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது எங்களின் முதன்மையான திட்டமாக உள்ளது. வங்கித் துறையின் திறனை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். வங்கி அமைப்பில் உள்ள பணம் அனைத்தும் செயல்படாத சொத்துகளில் உள்ளது. இதனால் கடன்களைக் குறைக்கும் விதமாக எதுவும் நடப்பதில்லை.

வளர்ச்சிக்குப் பயன்படும்படி வங்கிகளின் திறனை மேம்படுத்த வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். இவை அனைத்தும் ஒன்றிணைந்து தனியார் துறையைக் கடுமையாக பாதித்துவிட்டது. பெருநிறுவனங்கள் இதனால் பாதிப்படைவதில்லை. ஏனெனில் அவர்கள் பத்திரச் சந்தையையும் வெளிநாட்டு நிதியையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் இந்திய வங்கிகளைப் பயன்படுத்துவதில்லை. சிறு குறு நிறுவனங்களுக்கே இந்திய வங்கி அமைப்பின் ஆதரவு தேவைப்படுகிறது. சிறு குறு நிறுவனங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகிறது” என்று அவர் பேசினார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon